.
 
 
 
 
 
 

தனபாலிடம் மு.க.ஸ்டாலின் மனு

.

Wednesday, 19 April, 2017   03:40 PM
.
சென்னை, ஏப்.19:சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும். தமிழகம் ஸ்தம்பித்து விட்டது என்றும் திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து  கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 
.
அதில், உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கோரியிருப்பதாக தெரிகிறது.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயிகள்  கடும் துயரத்தில் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்தும், நிர்வாணமாகவும், புடவை கட்டிக்கொண்டும் இப்படி பல்வேறு போராட்டங்களை ஒரு மாத காலத்திற்கும் மேலாக  தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். அது குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.  அவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் அளித்து அவர்களை காக்க தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். அதற்காகத்தான் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து  மனு அளித்திருக்கிறேன்.

 தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை உடனடியாக தமிழகம் கொண்டு வரவும், ஸ்தம்பித்து போயிருக்கும் அரசு இயந்திரத்தை  முடுக்கி விடவும்  சட்டசபை கூட்ட வேண்டும் என்று கோருகிறேன். தற்போது நான் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்க காத்திருந்தேன். அவர் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவரையே சந்திக்க விரும்பாதவர், மக்களை எப்படி சந்திப்பார் என்றார்.அதிமுகவில் நடைபெறும் பிரச்சனை உள்கட்சி விவகாரம், அது பற்றி தாம் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை என்றும் ஸ்டாலின் கூறினார்.
| |

?????? :