.




 
 
 
 
 
 

தர்மத்திற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்

.

Wednesday, 19 April, 2017   03:32 PM
.
சென்னை, ஏப்.19:சசிகலா குடும்பத்தை அதிமுகவி லிருந்து நீக்கி வைத்திருப்பது தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்
செல்வம் கூறினார்.
.
சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்போம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அணி நேற்றிரவு முடிவெடுத்து அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை  கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது மூத்த நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், செம்மலை ஆகியோருடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுகவை மக்கள் இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவரது கொள்கைப்படி தொண்டர்கள், மக்கள் இயக்கமாக ஜெ., வழி நடத்தினார். ஜெ., மரணத்திற்கு பின் கட்சி சசி குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தர்ம யுத்தம் துவக்கப்பட்டது.

மக்கள் விருப்பத்திற்காக தான், எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைபடி, எங்கள் அடிப்படை கருத்தாக வைத்து தர்ம யுத்தம் துவக்கினோம். தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றியாக சசி குடும்பத்தை விலக்கி வைப்பது என அவர்கள் தரப்பில் முடிவு எடுத்துள்ளார்கள். தொடர்ந்து எ ங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதன்படி தொடர்ந்து மக்களுடைய எண்ணப்படியும், தொண்டர்கள் விருப்பப்படியும் அறப்போராட்டம் வலுப்பெறும்.

அதிமுக தொண்டர்கள் இயக்கமாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையி லான அணியினருடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
| |

?????? :