.
 
 
 
 
 
 

பன்னீர்செல்வம் திட்டவட்ட அறிவிப்பு

.

Tuesday, 18 April, 2017   04:46 PM
.

சென்னை, ஏப். 18: அதிமுகவில் சசிகலா குடும்பத்தின ருக்கு இடமில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக ஓ.பன்னீர்
செல்வம் கூறியுள்ளார். சமரச முயற்சி நடைபெற்று வரும் நிலையில் ஓ.பி.எஸ். அளித்துள்ள இந்த பேட்டி முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

.


சசிகலா அணி தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது ஓ.பி.எஸ். அணி தரப்பில் மைத்ரேயன் எம்.பி., பாண்டியராஜன் உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.


இந்த இரு குழுவினரும் இன்று இரவு சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் சந்தித்து பேசுவதாக உள்ளது.
இதனிடையே இன்று மதியம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஒரு குடும்பத்திடம் கட்சி செல்லக்கூடாது என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார் என்றார்.


மேலும் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தாம் தயார் என்று வெளியான செய்திக்கு பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்தார். அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் இருக்கக்கூடாது என்றும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த தயார் என்ற நிலையில் மாற்றம் இல்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.


இதன் அடிப்படையில் சசிகலாவும், தினகரனும் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். அணியினர் உறுதியாக இருப்பார்கள் என்று தெரிகிறது.  இதை சசிகலா தரப்பினர் ஏற்பார்களா? அல்லது வேறு விதமான சமரச திட்டத்தை முன்வைப்பார்களா? என்பது இன்று இரவு நடக்கும் பேச்சுவார்த்தையில் தெரியவரும்.

| |

?????? :