.
 
 
 
 
 
 

பெங்களூரில் நில நடுக்கம்

.

Tuesday, 18 April, 2017   03:56 PM
.

பெங்களூர், ஏப். 18: பெங்களூரில் இன்று காலை 8 மணிக்கு லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த சிலர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரப்பினர். 
.
பெங்களூர் கெங்கேரிபகுதியை சேர்ந்த மிலிந்த் தர்மேசன் என்பவர் தனது முகநூலில் குறிப்பிடுகையில் காலை 8 மணி அளவில் எனது வீட்டு கட்டில் 2 முதல் 3 நொடிகள் வரை 2 முறை அசைந்ததாகவும் வேறு யாரேனும் இதை உணர்ந்தீர்களா என கேட்டுள்ளார். இதே போல பனஷங்கரியை சேர்ந்த சுபாஷ் அகர்வாலும் தனது பேஸ்புக்கில் கூறி உள்ளார். இது குறித்து பேரிடர் விபத்து தவிர்ப்பு மைய அதிகாரி ஸ்ரீனிவாஸ்ரெட்டி கூறுகையில் பெங்களூர் புற நகர் பகுதிகளில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக பலர் குறிப்பிட்டுள்ளது உண்மைதான். இது ஒரு ரிக்டருக்கும் குறைவான அளவில் உணரப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் பொது மக்களிடையே இன்று காலை பீதி ஏற்பட்டது. பீதி யாரும் அடையத்தேவை இல்லை என்று கூறி உள்ளார்.
| |

?????? :