.




 
 
 
 
 
 

சென்னையில் வெயிலுக்கு தொழிலாளி பலி

.

Tuesday, 18 April, 2017   03:52 PM
.

அம்பத்தூர், ஏப்.18: திருமுல்லைவாயல் பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
.
அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் மாசிலாமணி நகரை சேர்ந்தவர் ஆன்ட்ருஸ் (வயது 40). இவர் பெயின்டராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் மயங்கி விழுந்த ஆன்ட்ருஸை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மயங்கி விழுந்த போதே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரணமடைந்த ஆன்ட்ருஸின் மனைவி சுதா. இவர்களுக்கு பிறந்து 6 மாதமான மகன் உள்ளான்.
| |

?????? :