.
 
 
 
 
 
 

விவசாயிகள் சாட்டையடி போராட்டம்

.

Tuesday, 18 April, 2017   03:51 PM
.
டெல்லி, ஏப்.18: டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 36வது நாளாக சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதி நீர் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 36வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விவசாயிகளின் கோரிக்கையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன்படி, இன்று சாட்டையடி போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு கூட்டமைப்பு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மண் சோறு சாப்பிட்டும், குட்டிக்கரணம், பாம்பு கடித்தல் மற்றும் புல் சாப்பிட்டு போன்ற பல் வேறு கட்டப்போராட்டங்களை நடத்தினர். இந்தநிலையில் விவசாயிகள் இன்று சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடியை போன்ற புகைப்படம் அணிந்த நபர் விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போல சித்தரித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மோடியை சந்தித்து விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
| |

?????? :