.
 
 
 
 
 
 

ஸ்ரீநகர் தொகுதியில் பரூக் வெற்றி

.

Saturday, 15 April, 2017   04:47 PM
.
ஸ்ரீநகர், ஏப்.15: 7 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்ற ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். காஷ்மீர் தலைநகரான இந்த தொகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற தேர்தலில் 7 சதவீத வாக்குகளே பதிவாகின. வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
.
35 வாக்கு சாவடிகளில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 2 சதவீத வாக்குகளே பதிவாகின. இன்று காலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய மாநாடு கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா அதிக வாக்குகள் பெற்று ஆரம்பத்தில் இருந்தே முன்னணியில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக மக்கள் ஜனநாயக கட்சியின்வேட்பாளர் நசீம் அகமது கான் அதிக வாக்குகள் பெற்று வருகிறார். மதிய நிலவரப்படி பரூக் அப்துல்லா வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
| |

?????? :