.
 
 
 
 
 
 

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

.

Thursday, 06 April, 2017   04:29 PM
.
சென்னை, ஏப். 6: அதிமுக (அம்மா) சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி.தினகரனை ஆதரித்து 47வது வார்டு கொருக்குபேட்டை முத்துமாரியம்மன் கோவில் தெரு, பழைய கண்ணாடி தொழிற்சாலை பகுதிகளில்  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  தீவிரவாக்கு சேகரித்தார். 
அப்போது அவர் பேசியாதவது:

.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ராதாகிருஷ்ணன் நகர் உறுப்பினராக பொறுப் பேற்று செயல்பட்ட காலத்தில் வட்டத்திற்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 14 இடங்களில் அம்மா உணவகங்கள் அமைத்து இந்த தொகுதிமக்களின் பசியை போக்கினார்கள். சுகாதாரமான வாழ்க்கை சூழலை உருவாக்க பட்டேல்நகர், அன்னை சந்தியா நகர், நெடுஞ்செழியன் நகர் ஆகிய இடங்களில் இருந்த மாநகராட்சி பூங்காகங்களை மேம்படுத்தி சிறப்பாக பராமரிக்க ஆணையிட்டு செயல் வடிவம் தந்தார். அம்மா திட்டத்தின் மூலம் சாதிசான்றிதழ், வருவாய்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதியோர், விதவை, உடல்நலமுற்றோர், கணவரால் கைவிடப்பட்டவர் ஆகியவருக்கு உதவிதொகை வழங்குதல், முதல்பட்டதாரி சான்றிதழ், பட்டா பரிமாற்றம் செய்தல் ஆகிய அரசு சேவைகளை மக்களின் தேவைகேற்பஅவர்களை தேடி வந்து வழங்கும் வகையில் செயல்படுத்தினார். டிடிவி.தினகரன் கொடுங்கையூர் எழில்நகரில் மாசற்ற நவீன படுத்தப் பட்டகுப்பை சேகரிக்கும் மையத்தை நிறுவுவேன் என்றும்பாரதிநகரில் 9.9 கோடி செலவிலும் சி.பி. சாலையில் 2 கோடி ரூபாய் செலவிலும் நடைபெற்று வரும் சுற்றுசூழல்பூங்காகங்களை மேம்படுத்தும் பணிகளை விரைவில் முடிக்கஆவன செய்வேன் என்றும் ஹரிநாராயணபுரத்தில் நடைபெற்று வரும் பசுமை பூங்கா நிர்மானபணிகளை விரைந்து செயல்படுத்த ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள். ஆர்.கே. நகர் தொகுதியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை தொடர்ந்து நடத்தி அங்கு பெறப்படும் கோரிக்கைகள் மனுக்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க ஆவன செய்வேன் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார்கள் என்றார். வாக்கு சேகரிக்க சென்றபோது புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் பி.கே.வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, நார்த்தாமலைபா. ஆறுமுகம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
| |

?????? :