.
 
 
 
 
 
 

ரூ.1 லட்சம் கொள்ளை

.

Thursday, 06 April, 2017   04:26 PM
.
சென்னை, ஏப்.6: ஈக்காட்டு தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ. 1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

.
ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 48). இவர் இரவில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போது சத்தம் கேட்டது. விழித்து பார்த்த போது தனது வீட்டில் இருந்து ஒரு மர்மநபர் ஓடுவதை பார்த்தார். பின்னர் வீட்டில் உள்ள அறையை பார்த்த போது அதிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஈக்காட்டு தாங்கல் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.
| |

?????? :