.
 
 
 
 
 
 

10 சவரன் நகை கொள்ளை

.

Thursday, 06 April, 2017   04:25 PM
.
தாம்பரம், ஏப்.6: பொழிச்சூர் அருகே தண்ணீர் கேட்பது போல வந்து பெண்ணை ஏமாற்றி 10 சவரன் தங்க நகையை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுகிறது:

.
பொழிச்சூர் ராஜேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவர் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி(வயது 46). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பானுமதி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் வீட்டிற்குள் வந்த அந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த சங்கர் நகர்போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

?????? :