.
 
 
 
 
 
 

மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

.

Thursday, 06 April, 2017   04:24 PM
.
ஆவடி, ஏப்.6: ஆவடி கோவர்த்தன கிரியில் புதிய அரசு மதுக்கடை திறப்பை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரமுள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அந்த கடைகளை மாற்று இடங்களில் அமைக்க அதிகாரிகள் இடம் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆவடி கோவர்த்தனகிரி சாலையில் கடை திறக்க ஒரு இடம் முடிவானதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி, இப்பகுதியை சேர்ந்த பாரதி நகர், செல்வம் நகர், பெரியார் நகர் உட்பட கோவர்த்தன கிரி மக்கள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டதை நடத்தினர். ஆனால் பொது மக்களை சந்திக்க போலீசாரோ அல்லது அதிகாரிகளோ யாரும் வரவில்லை என கூறப்படுகிறது.
| |

?????? :