.
 
 
 
 
 
 

மாநகர செய்திகள்

.

Thursday, 06 April, 2017   04:20 PM
.
சென்னை, ஏப்.6: சென்னை வேளச்சேரியில் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

.
சென்னை வேளச்சேரி பாரதியார் நகரை சேர்ந்தவர் மைதிலி. இவர் இன்று அதிகாலை 5 மணி அளவில் தனது வீட்டு தெரு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நேரத்தில் பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மைதிலி கோலம் போட்டுக்கொண்டிருப்பதையும், அவர் கழுத்தில் தங்க சங்கிலி அணிந்திருப்பதையும் பார்த்தார். பைக்கில் பின்பக்கமாக சென்று கண் இமைக்கும் நேரத்தில் மைதிலி அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். அதிர்ச்சியடைந்த மைதிலி இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சங்கிலி அறுத்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். லாரி மோதியதில் மாணவன் சாவு கடற்கரை சாலை கண்ணகி சிலை அருகே லாரி மோதி பைக்கில் சென்று கொண்டிருந்த பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவன் பலியானார். அவருடன் வந்த நண்பர் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ஷெனாய் நகர் வெங்கடாஜலம் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 17). இவரது நண்பர் கோகுல் (வயது 17). இருவரும் சமீபத்தில் பிளஸ்டூ தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்று மாலை காற்று வாங்குவதற்காக மெரினா கடற்கரைக்கு பைக்கில் கோகுலுடன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களுடைய பைக்கின் மீது லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் 2 பேரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் இறந்து போனார். கோகுல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிக்கும் போது ரவுடி படுகாயம் போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது படுகாயம் அடைந்த ரவுடி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 23), இவர் புல்லா அவென்யூ பகுதியில் நேற்றிரவு 11 மணி அளவில் கத்தி முனையில் மிரட்டி வழி பறி செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கு அமைந்தகரை போலீசார் சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்த விக்னேஷ் தப்பிக்க ஓடினார். போலீசாரும் விடாமல் பின்னால் ஓடினர். இந் நிலையில் விக்னேஷ் திடீரென ஒரு தனியார் திருமண மண்டபத்தின் மீது ஏறினார். போலீசாரும் உடன் ஏறினார்கள். அப்போது போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த மண்டபத்தின் மாடியிலிருந்து விக்னேஷ் கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விக்னேஷ் மீது அதிக வழக்குகள் உள்ள நிலையில் அவர் குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தங்கம் கடத்திய ஆசாமி கைது பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தி வந்த ஆசாமியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாங்காக்கில் இருந்து இன்று காலை தனியார் விமானம் சென்னை வந்தது. விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாலிபர் வைத்திருந்த பை சந்தேகத்திற்கிடமாக வகையில் இருந்தது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்த போது அவர் சென்னையைச் சேர்ந்த அஜ்மல்கான் (வயது 45) என்பது தெரியவந்தது. அவர் பையில் வைத்திருந்த ஒன்றரை கிலோ எடையுள்ள 15 தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.45 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் அவரை கைது செய்து தங்கம் கடத்தும் உங்களுக்கும் அஜ்மல்கானுக்கும் தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

?????? :