.
 
 
 
 
 
 

1 லட்சம் வீடுகள் கட்டப்படும்

.

Thursday, 16 March, 2017   05:17 PM
.

சென்னை, மார்ச் 16: வீடுகள் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்றும், இதற்காக ரூ.3250 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், விவ சாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

 

.
2017-18-ம் ஆண்டிற்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கை இது என்பது  குறிப்பிடத்தக்கது.


டி.ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டின் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் ரூ.2000 கோடி திட்ட மதிப்பீட்டில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
* பயனாளிகள் பங்களிப்புடன் ரூ.3250 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகளை பயனாளிகளே கட்டிக்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும்.


* வீட்டு வசதி வாரியத்தால் நலிந்த பிரிவினருக்கு அதிக அளவில் வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 2017-18-ம் ஆண்டு ரூ.3707 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 22178 குடியிருப்பு பணிகள் நிறைவு செய்யப்படும்.
* ரூ.808 கோடி செலவில் 3300 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ரூ.1000 கோடி
* கிராமப்புற சாலைகள் திட்டம் ரூ.758 கோடி


* ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம் ரூ.800  கோடி
* சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் ரூ.470 கோடி
* ஊரக வளர்ச்சித்துறை ரூ.16,665 கோடி
* திறன்மிகு நகரங்கள் ரூ.772 கோடி
* நகர்புற மாற்றுத்திட்டம் ரூ.1200 கோடி
* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க
* நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.563 கோடி


* மருத்துவ கல்விக்கான பட்ட மேற்படிப்பு இடங்கள் 1362 ஆக உயர்வு
* நகர்புற மருத்துவ கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.126 கோடி
* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் 2017 ஜனவரி முதல் மேலும் நீட்டிக்கப்பட்டு ரூ.1348  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18,000 ஆக உயர்வு. இத்திட்டத்திற்கு ரூ.1001  கோடி ஒதுக்கீடு


* அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி திட்டம், நாப்கின் திட்டம் போன்றவற்றிக்கு ரூ.61 கோடி
* 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைபள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் கட்டமைப்பு வசதிக்காக ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* மாணவர்களுக்கு சீருடை, காலணி, உபகரணங்கள் உள்ளிட்ட  விலையில்லா பொருட்கள் வழங்குவதற்காக ரூ.1503 கோடி


* மடிக்கணினிகள் வழங்குவதற்கு ரூ.758  கோடி
* உயர் கல்வித்துறைக்கு ரூ.3680  கோடி
* அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.139 கோடி
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.165 கோடி
* தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உணவு கட்டணம் ரூ.875-லிருந்து ரூ.1000 மாக உயர்வு
* பள்ளி விடுதி மாணர்வகளுக்கான கட்டணம் ரூ.755-லிருந்து ரூ.900ஆக உயர்வு
* மீன் வளத்துறைக்கு ரூ.860 கோடி


* ரேஷனில் மானிய பொருட்கள் வழங்கப்படும்
* மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை
* காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க நிதியுதவி
* மீனவர்களுக்கான மானிய டீசல் 15 ஆயிரம் லிட்டரில் இருந்து 18 ஆயிரம் லிட்டராக உயர்வு
* கடல் அரிப்பை தடுக்க ரூ.20  கோடியில் திட்டம்


* இயந்திர மீன்பிடி படகுகளுக்கு வழங்கும் டீசல் ரூ.18 ஆயிரமாக உயர்வு
* பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.180 கோடி
* குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.615 கோடி.

| |

?????? :