.
 
 
 
 
 
 

எதிர்க்கட்சி தலைவருக்கு சபாநாயகர் உ

.

Thursday, 16 March, 2017   05:11 PM
.

சென்னை, மார்ச் 16: தன் மீது பிரதான எதிர்க்கட்சி  சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் தனபால் இன்று மு.க.ஸ்டாலினுக்கு உறுதி அளித்தார்.


.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 10.25 மணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சபைக்கு வரத் தொடங்கினர்.


சபை தொடங்குவதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் அவைக்குள் நுழைந்தபோது அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றார்கள். சரியாக 10.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவைக்கு வந்து திருக்குறளுடன் அவை நடவடிக்கைகளை துவக்கினார்.


அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்காததால் அவர் என்ன பேசினார் என்றே தெரியவில்லை. அப்போது சபாநாயகர் பேசினார். நீங்கள் கொடுத்துள்ள இரண்டு பிரச்சனைகள் குறித்து எனக்கு தெரியும். ஒன்று விதிமுறைகளுக்கு மாறாக கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ஏ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் கடந்த 9-ந் தேதி வந்து கோரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். அவற்றை எடுத்துக்கொள்ள எனக்கு  14 நாள் அவகாசம் உண்டு. எனவே கண்டிப்பாக அப்பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதத்திற்கு அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்தார்.


சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுக் கப்பட்டுள்ளது. அப்பிரச்சனை குறித்தே மு.க.ஸ்டாலின் அவையில் எழுப்ப முயன்றார்.

| |

?????? :