.
 
 
 
 
 
 

கமிஷனர் ஜார்ஜுக்குகோர்ட் கண்டனம்

.

Thursday, 16 March, 2017   05:10 PM
.

சென்னை, மார்ச் 16: சென்னை மாநகர போலீஸ் கமிசனர் ஜார்ஜுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார்.  சென்னை மாநகராட்சி கவுன்சிலர் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பொன். தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி என். கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.


.

இந்த வழக்கு நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற உத்தரவு படி, மனுதாரர் பொன். தங்கவேலுவுக்கு சென்னை போலீஸ் கமிசனர் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் நீதிபதி கிருபாகரன் போலீஸ் கமிசனர் ஜார்ஜ்க்கு கடும் கண்டனம் தெரிவித்து  கூறியதாவது:-    


பொன்.தங்கவேலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற டிசம்பர் 2ஆம் தேதி உத்தரவை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? உயர் பொறுப்பிலிருக்கும் ஆணையரே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட்டால் ஆய்வாளர் எப்படி மதிப்பார்?  இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிசனர் ஜார்ஜ் தானாக வந்து விளக்கமளிப்பாரா?  அல்லது சட்டப்பூர்வமாக ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?


அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, போலீஸ் கமிசனரிடம் இன்றைக்குள் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

| |

?????? :