.
 
 
 
 
 
 

முதல்வராக அம்ரீந்தர் பதவியேற்பு

.

Thursday, 16 March, 2017   05:08 PM
.

சண்டிகர், மார்ச் 16:  பஞ்சாப் புதிய முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் இன்று பதவியேற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் 77-ல் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை பதவியேற்றது. ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், கவர்னர் வி.பி.சிங் பண்டோர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிஜேபியில் இருந்து விலகி அண்மையில் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் உட்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


சித்துவின் பெயர் 3-வது இடத்தில இருந்தது. பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இமாச்சல பிரதேச முதலமைச்சர் வீர் பகதூர்சிங், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அமைச்சரவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரஹம் முகிந்தர் முதலிடம் வகிக்கிறார். 3 பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சித்துவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.


முதலமைச்சராக பதவியேற்றுள்ள அம்ரீந்தர் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
75 வயதான அம்ரீந்தர் சிங் 2-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். அகாலிதளம் பிஜேபி கூட்டணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளது.

| |

?????? :