.




 
 
 
 
 
 

அவினாசி திட்டத்திற்கு ரூ. 300 கோடி

.

Thursday, 16 March, 2017   04:25 PM
.

சென்னை, மார்ச் 16: அத்திக்கடவு அவினாசி பாசன  திட்டத்திற்கு ரூ. 300 கோடி  ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பட்ஜெட்டில் இது குறித்து அவர் கூறியதாவது:-


.

பட்ஜெட்டில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.  விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அத்திக்கடவு அவினாசி பாசனம், நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். மத்திய அரசின் அனுமதியை பெற்று 2017-2018-க்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக  250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தாமிரபரணி நதியை நம்பி ஆற்றுடன் இணைப்பதற்கான பணிகள் நான்கு கட்டமாக நடைபெற்று வருகின்றன. முதல்  2 கட்ட பணிகளை நிறைவு செய்ய ரூ. 213 கோடி செலவிடப்பட்டுள்ளது. 3-வது மற்றும் 4-வது கட்டப்பணிகளை தொடங்குவதற்கான நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இத்திட்டத்திற்காக ரூ. 300 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நபார்டு வங்கி நிதியுதவியுடன் பாசன திட்டங்கள் ரூ.279 கோடி செலவில்மேற்கொள்ளப்படும்.  நீர்வள ஆதார துறைக்கு ரூ. 4791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

| |

?????? :