.
 
 
 
 
 
 

ஜெட்வேகத்தில் நிதிநிலை அறிக்கை

.

Thursday, 16 March, 2017   04:22 PM
.

சென்னை, மார்ச் 16: சட்டசபை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஜெட்வேகத்தில் வேகமாக படித்ததை தொடர்ந்து அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

 

.


சட்டசபையில் 2017-18-ம் ஆண்டுக்கான 87 பக்க நிதிநிலை அறிக்கையை காலை 10.30மணியளவில் நிதியமைச்சர் ஜெயக்குமார் படிக்க தொடங்கினார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புரியும் வகையில் நிதிநிலை அறிக்கையை மெதுவாக நிதியமைச்சர் ஜெயக்குமார் படித்தார்.


இதன் காரணமாக மதியம் 12 மணியளவில் 50 பக்கங்கள் மட்டுமே வாசித்த நிலையில் அவையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது நிதியமைச்சர்  திடீரென நிதிநிலை அறிக்கையை ஜெட் வேகத்தில் வேகமாக வாசிக்க தொடங்கினார்.இதனால் சட்டசபையில் சிரிப்பொலி ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமார் குறுக்கீட்டு, முன்புபோலவே அனைவருக்கும் புரியும்படி மெதுவாக படிக்கட்டுமா? அல்லது வேகமாக படிக்கவேண்டுமா? என்று கேட்டார்.


இதை கேட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர்களின் கருத்துக்களை  நகைச்சுவையுடன் குறிப்பிட்டனர்.அப்போது ஜெயக்குமார் உங்கள் ஒப்புதலோடு வேகமாக வாசிக்கிறேன் என்று கூறி நிதிநிலை அறிக்கையை மீண்டும் ஜெட் வேகத்தில் வாசிக்க தொடங்கினார்.இதை கண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிரிப்பொலி எழுப்பினர். இரண்டு பக்கங்களை வேகமாக படித்த ஜெயக்குமார் மீண்டும் நிதிநிலை அறிக்கையை மெதுவாக வாசிக்க தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், சுவாரஸ்சியம் வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்று படித்தேன் என கூறி மீண்டும் மெதுவாக நிதிநிலை அறிக்கை வாசிக்க தொடங்கினார். இதனால் அவையில் சிறிதுநேரம் சிரிப்பொலி ஏற்பட்டது.

| |

?????? :