.
 
 
 
 
 
 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

.

Thursday, 16 March, 2017   04:19 PM
.

சென்னை, மார்ச் 16: தொழில் முதலீடுகளை தொடர்ந்து ஈர்ப்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு  இந்த நிதியாண்டில் நடைபெறும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.


.

 இது குறித்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் தமிழ்நாடு முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தøட்டத்தினை  1295 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் 2017-2018 ஆம் ஆண்டு முதல் அரசு செயல்படுத்தும். இத்திட்டம் தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுடன், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏதுவான சிறந்த கொள்கைச் சூழலையும் ஏற்படுத்தும்.

நாட்டிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக  தமிழ்நாடு  திகழ்வதை எடுத்துக்காட்டும் வகையிலும்,  அந்நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் முதன் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும். இம்மாநாட்டில் 4.70 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு  அளிக்கக்கூடிய வகையில், 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.


தொழில் முதலீடுகளை தொடர்ந்து ஈர்ப்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் நிதியாண்டில் நடத்துவதற்காக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

| |

?????? :