.
 
 
 
 
 
 

2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம்

.

Thursday, 16 March, 2017   04:01 PM
.

சென்னை, மார்ச் 16: மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளை ஜப்பான் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


.

சட்டசபையில் அவர் கூறியதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் 45 கி.மீ. நீளத்திற்கு முதல் கட்ட பணிகள் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரை 21 கி.மீ. நீளம் உள்ள உயர்த்தப்பட வழித்தடத்தில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுரங்க வழித்தடப்பகுதிகளில் பணிகள் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.   சென்னை கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடப்பகுதிகள் விரைவில் சேவை தொடங்கப்படும்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீளத்திற்கு நீட்டிப்பு பணிகள் ரூ.3770 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மெட்ரோ ரெயில் திட்டத்தின்2-ம் கட்டபணிகளாக  மொத்தம் 107.5 கி.மீ. நீளம் கொண்ட 3 மொட்ரோ ரெயில் தடங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை  விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். தமிழ்நாடு சுற்றுலா உட்கட்ட அமைப்பு மேம்பாட்டு முதலீடு திட்டத்தின் கீழ் முதல் கட்ட பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும். 2-ம் கட்ட பணிகள் ரூ.403 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

| |

?????? :