.
 
 
 
 
 
 

அதிமுக சார்பில் தினகரன் போட்டி

.

Wednesday, 15 March, 2017   05:08 PM
.


சென்னை, மார்ச் 15:
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.  இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை யில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


கட்சியின் துணைப் பொதுச்செயலா ளர் டிடிவி தினகரன் தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, வேணுகோபால், ஐஸ்டின் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.  ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரி மகனான டிடிவி தினகரன் 1999 பெரியகுளம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ராஜ்யசபை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


என்னை ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பளித்த ஆட்சி மன்ற குழுவுக்கும், சசிகலாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதி அது அவரைப் போலவே நலத்திட்டங்கள் தொடரும் என்றார்.

| |

?????? :