.
 
 
 
 
 
 

காஞ்சியில் பாமக ஆர்ப்பாட்டம்

.

Wednesday, 15 March, 2017   03:54 PM
.

காஞ்சிபுரம், மார்ச் 15 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன முறையில் காலிப் பானையை வைத்து வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் வரவேற்றார். மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


மாநில துணைப்பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் சேஷாத்ரி, மாநில துணை அமைப்பு செயலாளர் உமாபதி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராஜ். மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், சின்ன காஞ்சிபுரம் நகர செயலாளர் செந்தில், மத்திய மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்டதலைவர் வரதராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆறுமுகம், நகர வன்னியர் சங்க தலைவர் கன்னிவேல், இளைஞரணி ரவி  உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்களில் பெண்களும் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

| |

?????? :