.
 
 
 
 
 
 

ஜாமீனுக்கு விசித்திர நிபந்தனை

.

Wednesday, 15 March, 2017   03:52 PM
.

அரியலூர், மார்ச் 15: ஜாமீனில் வெளியே வருபவர் களுக்கு புதிய நிபந்தனையை அறிவித் துள்ளது அரியலூர் நீதிமன்றம்.
தமிழகத்தில் வர்தா புயலுக்கு பிறகு சீமக்கருவேல மரங்கள் அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

 

.

மண்ணின் தன்மையை கெடுத்து உபயோகமற்றதாக மாற்றும் இந்த மரங்களை அகற்றும் பணியில் பல தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்துள்ளது.  இந்நிலையில் அரியலூர் நீதிமன்றம் இன்று இது தொடர்பாக புதிய நிபந்தனை ஒன்றை அறிவித்துள்ளது.

இனி ஜாமீனில் வெளியே வருபவர்கள் அவர்கள் வெளிவரும் நாளில் இருந்து 20 நாட்களுக்கு 100 சீமக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அரியலூர் நீதிமன்ற நீதிபதி கூறும்போது, இவ்வாறு கருவேல மரங்களை நீக்கிய பிறகு அதற்கான சான்றிதழை விஏஓவிடம் சமர்பித்து ஓப்புதல் வாங்கி நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

| |

?????? :