.
 
 
 
 
 
 

மணிப்பூர் - கோவாவில் ஜனநாயக படுகொலை

.

Tuesday, 14 March, 2017   04:50 PM
.
புதுடெல்லி, மார்ச் 14: மணிப்பூர்-கோவாவில் பிஜேபி ஆட்சி அமைப்பது ஜனநாயகப் படுகொலை என்று டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறினார்.
இது குறித்து டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக் கிறது.
.

பெரிய கட்சி என்ற முறையில் காங்கிரசை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்திருக்க வேண்டும் என்றார்.


அவர் மேலும் கூறுகையில், காங்கிர சால் ஆட்சி அமைக்க முடியாத  பட்சத்தில் தான் பிஜேபிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
முதலிலேயே அந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது ஜனநாயக படுகொலை என்றார்.


சுயேட்சை எம்எல்ஏக்களை மணிப்பூரில் இருந்து கவுகாத்திக்கு கடத்திச் சென்றிருப்பதாக கூறிய அவர் இதன் மூலம் ஜனநாயக கோட்பாடுகள் மீறப்பட்டு இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டினார்.
கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத மனோகர் பாரிக்கர் எப்படி அந்த மாநிலத்தின் முதலமைச்சராக முடியும். அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க போதிய பலம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.


இதற்கு பதிலளித்து பிஜேபி செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கூறுகையில், இரு மாநிலங்களிலும் எங்களுக்கு ஆட்சி அமைக்க தார்மீக உரிமை உண்டு.
ஆட்சி அமைப்பதற்கு சட்ட மன்றத்தில் பெரும்பான்மை வேண்டும் என்பதுதான் முக்கியம். அது எங்களிடம் இருக்கிறது.


கோவாவில் நடைபெற்ற தேர்தலில் மொத்த வாக்கு விகிதத்தில் நாங்கள் காங்கிரசை விட 4 சதவீதம் அதிகம் பெற்றிருக்கிறோம்.
இதைவிட பெரிதாக வேறு என்ன வேண்டும் என்றும் அவர் கேட்டார்.

| |

?????? :