.
 
 
 
 
 
 

பிரிட்ஜோவுக்கு மெரினாவில் அஞ்சலி

.

Tuesday, 14 March, 2017   04:43 PM
.
சென்னை, மார்ச். 14: இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் ப்ரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் மீனவர்கள் ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் மலர்தூவி இரங்கல் தெரிவித்தனர். சென்னை நடுக்குப்பத்திலிருந்து ஊர்வலமாக வந்த மீனவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்று ப்ரிட்ஜோவின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவ மக்கள் கூறுகையில்   துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்வதோடு மீனவர் மீதான தாக்குதல் இனியும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளையும், உடமைகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்  என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
| |

?????? :