.
 
 
 
 
 
 

கூலித்தொழிலாளி கைது

.

Tuesday, 14 March, 2017   04:42 PM
.
தாம்பரம், மார்ச் 14: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனின்  தலையில் கல்லை போட்டு கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-


  பல்லாவரம் அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர், 4 வது தெருவைச்சேர்ந்தவர்  சுப்பிரமணி (வயது 53). கூலி தொழிலாளி.  இவருக்கு மனைவியும் இரண்டுமகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.


அதே பகுதி மசூதி தெருவைச்சேர்ந்தவர்  வெங்கடேஷ் (வயது 45).இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக வேலைக்கு செல்வதும்  சேர்ந்து மது அருந்துவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று பணிக்கு சென்று வந்த இவர்கள்  அஸ்தினாபுரம்திருமால் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்குசென்று மது அருந்தியுள்ளனர்.


அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் இருவரும்கட்டி புரண்டு தாக்கிகொண்டனராம். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வெங்கட÷ஷ் அருகில் கிடந்த கல்லை  எடுத்து  சுப்பிரமணி தலையை நசுக்கியுள்ளார். இதில் சுப்பிரமணி சம்பவ  இடத்திலேயே பலியானார்.


 இதில் வெங்கடேஷûக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார் பலியான சுப்பிரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயம் அடைந்த வெங்கடேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் கொலை குற்றவாளி வெங்கடேஷை கைது செய்து போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போதையில் ஏற்பட்ட தகராறில்  நண்பரை கொலை செய்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

| |

?????? :