.
 
 
 
 
 
 

உ-பியில் அதிக பெண் எம்எல்ஏக்கள்

.

Tuesday, 14 March, 2017   04:34 PM
.
புதுடெல்லி, மார்ச். 14: இந்தியா சுதந்திரம் அடைந்திலிருந்து உத்தர பிரதேசத்தில் நடந்த தேர்தல்களில், இந்த முறை தான் அதிகமான பெண் வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர். இது குறித்து, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
.

உத்தர பிரதேசத்தின் 17வது சட்டசபைக்கான தேர்தலில், மொத்தம் 38 பெண் வேட்பாளர்கள் எம்.எல்.ஏ-வாக தேர்வாகியுள்ளனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்த்து வெறும் 96 பெண் வேட்பாளர்களே தேர்தலில் நிறுத்தப்பட்டனர். இதில் அதிகப்பட்சமாக பாஜக 43 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. பாஜக நிறுத்திய பெண் வேட்பாளர்களில், 32 பேர் எம்.எல்.ஏ-க்களாக தேர்வாகினர். 

இதுகுறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, அதிக பெண்கள் எம்.எல்.ஏ-க்களாகி உள்ளது இந்த தேர்தலுக்கு மேலும் ஒரு சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

| |

?????? :