.
 
 
 
 
 
 

ஜம்மு - காஷ்மீர் சுரங்கச்சாலை

.

Thursday, 09 March, 2017   04:27 PM
.
புதுடெல்லி, மார்ச். 9: ஜம்மு சு காஷ்மீர் இடையே தேசீய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சுரங்கச்சாலையை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்கிறார். 

.
நாட்டின் பிராம்மாண்ட தேசீய நெடுஞ்சாலையாக சென்னை - நாஷ்ரி நெடுஞ்சாலை உள்ளது. ஜம்மு காஷ்மீர் வழியாக செல்லும் இந்த சாலை நாட்டின் கடைசிப்பகுதியை அடைகிறது. இந்த நெடுஞ்சாலையில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இடையே ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை சமாளிக்க 9.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பூமிக்கடியில் நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இந்த சுரங்கச்சாலைக்கான தொடக்கப்பணிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். விரைவில் பிரதமர் மோடி இந்த சாலையை திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இடையே 38 கிலோமீட்டர் தொலைவு குறையும். மேலும் பனி மற்றும் மழைக்காலங்களில் பனிப் பொழிவு மற்றும் மண்சரிவால் ஏற்படும் போக்குவரத்து தடைகளில் இருந்து விடிவு காலம் பிறக்கும். இதன் மூலம் காஷ்மீரின் பொருளாதாரம் பல வழிகளிலும் வளர்ச்சியடையும். இதே போல குவாசிகண்டிலிருந்து பனிஹாலுக்கு 8.45 கிலோ மீட்டர் சுரங்கச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமும் 50 கிலோமீட்டர் தூரம் குறையும் என்றும் இந்தப் பணிகள் வரும் மார்ச் 2018 ல் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினர்.
| |

?????? :