.
 
 
 
 
 
 

ஹபீஸ் சையீத் புலம்பல்

.

Tuesday, 31 January, 2017   04:06 PM
.
லாகூர், ஜன.31: மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி  ஹபீஸ் சையீத் மற்றும் 4 பேரை அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரண மாகவே பாகிஸ்தான் கைது செய்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு மோடி-டிரம்ப் இடையே வளர்ந்து வரும் நட்பே காரணம் என்று சையீத் கூறியுள்ளார்.


.
2008 நவம்பர் 26-ல் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப் புக்கு மூளையாக திகழ்ந்த ஜமாத்-உத்-தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையீத் மற்றும் 4 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஒளிந்து உள்ளனர். இவர்களை ஒப்படைக்கு மாறு இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நிர்ப்பந்தம் காரணமாக ஹபீஸ் சையீத் உள்ளிட்ட 5 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த இந்த உத்தரவு நேற்றிரவு செயல்படுத்தப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இதனிடையே ஹபீஸ் சையத் பேசிய வீடியோ ஒன்று நேற்று இஸ்லாமாபாத்தில் வெளியிடப்பட் டது. காவலில் வைக்கப்பட்டு இருக்கும் அவர் கூறுகையில், ஜமாத்-உத்-தவா இயக்கத்தின் தலைமையகத்தை போலீசார் முற்றுகையிட்டு எண்ணை ஜோகர் நகரில் உள்ள இல்லத்தில் காவலில் வைத்து உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்திய பிரதமர் நரேந்திரமோடி இடையே நட்பு வளர்ந்து வருகிறது. அதன் காரணமாகவே பாகிஸ்தான் அரசாங்கத்தை டிரம்ப் நிர்ப்பந்தம் செய்து என்னை கைது செய்ய வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டினார்.
| |

?????? :