.
 
 
 
 
 
 

டிரம்ப் நாளை பதவியேற்பு

.

Thursday, 19 January, 2017   03:41 PM
.
வாஷிங்டன், ஜன.19:அமெரிக்காவின் 45-வது அதிபராக 70 வயதான ரோனால்டு டிரம்ப் நாளை பதவியேற்கிறார். அவருடன் துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள்  வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் மற்றும் அமெரிக்காவின் நாடாளுமன்ற  கட்டிடம் அமைந்துள்ள கேபிடல் ஹில்ஸ் வளாகத்தில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
.
பதவியேற்பு விழா வைபவத்திற்கு டிரம்ப் மற்றும் துணை அதிபர்  மைக் பென்ஸ் ஆகியோரை தற்போதைய அதிபர் ஒபாமா மரபுபடி அழைத்து வருவார். பதவியேற்பு மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் முடிவடைந்ததும் அணிவகுப்பு மரியாதை நடைபெறும்.1981-ம் ஆண்டில் இருந்தே அமெரிக்க அதிபர்களின் பதவியேற்பு விழா  கேபிடல் ஹில்ஸ் மேற்கு முனையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றார். அதை அடுத்து டிரம்ப் உறுதிமொழி எடுத்து பதவியேற்று கொள்வார். இந்த விழாவை ஒரு வாரத்திற்கு கொண்டாட அமெரிக்கா முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
| |

?????? :