.
 
 
 
 
 
 

ரூ.1316 கோடி சொத்து

.

Tuesday, 10 January, 2017   03:53 PM
.
புதுடெல்லி, ஜன.10: குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து  சேர்த்தது தொடர்பாக, பகுஜன் சமாஜ் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார், வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவரது சகோதரர் ஆனந்த் குமார். தொழிலதிபராக உள்ளார். ஆனால், இவரது பெயர் இந்திய தொழிலதிபர்கள் பட்டியலில் பிரபலமாகவில்லை. ஆனால், அவர் குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதி முதல்வராக இருந்த கால கட்டத்தில்  2007 முதல் 2014 காலகட்டத்தில், ரூ.7.5 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது.


இது குறித்தும், இவர் தொடர்பான சில நிறுவனங்கள் வாங்கிய பல கோடி கடன் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனந்த் குமார், மிகப்பெரிய பங்குதாரராக உள்ள, டில்லியை சேர்ந்த ஆக்ரிதி ஓட்டல் நிறுவனங்கள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது போல் பல முறைகேடுகள் உள்ளது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

| |

?????? :