.
 
 
 
 
 
 

நான்கு கட்ட போராட்டம்

.

Tuesday, 10 January, 2017   03:52 PM
.
சென்னை, ஜன.10:  பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையில் இருந்து நீக்கியதை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் 4 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். போகி பண்டிகை அன்று அரசு அலுவலகங்கள் முன் கொள்கை முழக்க ஆர்ப்பாட்டமும், பொங்கல் அன்று பணி மறுப்பு போராட்டமும் நடத்த உள்ளனர். இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று மாலை 5 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாளை (11-ந்தேதி) தபால் நிலையங்களை முற்றுகையிட்டு மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 13-ந்தேதி போகிப் பண்டிகை அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது. பொங்கல் பண்டிகை அன்று வேலைக்கு செல்லாமல் பணி மறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.


ஒவ்வொரு மாநிலங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
இதனை அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவு செய்யும். இதன்படி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறையாகும்.

 இதில் 3 நாட்களை பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி அறிவிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அவர்களே பொங்கல் பண்டிகையை பொதுவிடுமுறை தினத்தில் இருந்து விடுவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

| |

?????? :