.
 
 
 
 
 
 

கட்டிட தொழிலாளி பலி

.

Tuesday, 10 January, 2017   03:46 PM
.
செங்குன்றம், ஜன.10: சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி(வயது 55). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.  புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் வீட்டில்  கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதில் வீரமணி பணியாற்றி வந்துள்ளார்.
.
அப்போது 2-வது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்துள்ளார். அவரை உடனே பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானர்.
இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

?????? :