.
 
 
 
 
 
 

பொங்கலுக்கு கட்டாய லீவு வேண்டும்

.

Tuesday, 10 January, 2017   03:44 PM
.
 சென்னை, ஜன.10: தைப்பொங்கலுக்கு மீண்டும் கட்டாய விடுமுறை வேண்டும் எனக் கோரி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.  
வை.கோ  இந்தியா என்கிற நாடு பல்வேறு இனங்களின் கூட்டமைப்பாகும். இதில் எந்த துறையில் கை வைத்தாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்துண்டாகும். பிரதமர் மோடி உடனே தலையிட்டு மீண்டும் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் பொங்கல் பண்டிகை நாளை இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
.

விஜய்காந்த் அவசர சட்டம் இயற்றியாவது ஜல்லிக்கட்டை கொண்டு வரவேண்டும் என அற வழியில் தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசு பொங்கல் பண்டிகை நாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தமிழர்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. எனவே மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் கூறி உள்ளார்.


திருநாவுக்கரசர்
கட்டாய விடுமுறை ரத்து மூலம் மிகப்பெரிய துரோகத்தை மத்திய பிஜேபி அரசு செய்திருக்கிறது. தமிழக மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் பொங்கல் விழாவிற்கான விடுமுறையை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை உருவாகும்  என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


தி.வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில்  பொங்கல் திருநாள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். ஜல்லிக்கட்டுக்கு சோதனை வந்துள்ள நிலையில் இந்த திருநாளின் விடுமுறையையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது இதயத்தில் வேல் பாய்ந்த வேதனையாகும். பிரதமர் மோடி உடனே தலையிட்டு மீண்டும் கட்டாய விடுமுறையாக்க வேண்டும்.


ஏ.நாராயணன்
ச.ம.க.நிறுவனர் கூறுகையில்,  தமிழக இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். பொங்கல் பண்டிகையை விருப்ப விடுமுறை என்று அறிவித்ததை வாபஸ் பெற்று கட்டாய விடுமுறையாக உடனே அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

| |

?????? :