.
 
 
 
 
 
 

மாணவன் தற்கொலை முயற்சி

.

Tuesday, 10 January, 2017   03:40 PM
.
காஞ்சிபுரம், ஜன.10: மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருபவர் பரத். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அனுமதி இன்றி வந்ததால் அந்த கல்லூரியின் சார்பில் இருந்து மதுராந்தகம் கல்லூரி தாளாளருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
.

அதன் பின் அனுமதி இன்று சென்ற மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்துள்ளனர்.


பரத் தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது அவரது தாய் தாளாளரின் காலில் விழுந்து அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த பரத் வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள் கல்லூரியை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். 

| |

?????? :