.
 
 
 
 
 
 

குடும்ப அரசியலில் திடீர் திருப்பம்

.

Tuesday, 10 January, 2017   03:39 PM
.
புதுடெல்லி, ஜன.10: முலாயம் சிங்கின் செல்ல பேத்தி களான 15 வயதாகும் அகிலேஷின் 2 மகள்கள் நேற்று அவரை சந்தித்து பேசி அப்பாவுடன் நேரடியாக பேச வைத்தனர். பேத்திகள் செய்த இந்த சமரச முயற்சிக்கு பின்  சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் எனவும், இருவரும் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்றும்  முலாயம்சிங் யாதவ் தெரிவித் ததையடுத்து அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தேசிய தலைவர் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு கட்சியில் பிளவை உண்டாக்கி உள்ளது. அடுத்த மாதம் முதல் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் யாருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் இருவரிடமும் பெரும்பான்மை ஆதரவை கேட்டது.


இந்நிலையில் சைக்கிள் சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தகப்பனாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்று தெரியாமல் தவித்த அகிலேஷ் யாதவ்வும், அவரது மனைவி டிம்பிளும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த முலாயமை வரவேற்க விமான நிலையம் சென்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆனாலும் முலாயம் தனது பாசத்தை மறைத்து தனது பேத்திகளான அகிலேஷின் 2 மகள்களிடம் மட்டும் கொஞ்சி குலவியபடியே பேசினாராம். 

 

முலாயம் சிங் வீடு திரும்பியதும் மீண்டும் பேத்திகளான அதிதி மற்றும் தினா ஆகியோர் தாத்தா விரும்பும் பண்டங்களுடன் சென்று சந்தித்து பாச மழை பொழிந்தனர். அப்போது முலாயம்  என் பாசம் பிடிவாதக்காரனாகிய உன் தந்தை அகிலேஷுக்கு எங்கே புரிய போகிறது  என்று கூறி கண்ணீர் விட்டாராம். தாத்தா கூறியதை உடனே தனது தந்தை அகிலேஷுக்கு அதிதியும், தினாவும் தெரியப்படுத்தினர். அதன் பிறகு அகிலேஷ் யாதவும், முலாயமும் தொலைபேசியில் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.


இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை வரவழைத்து முலாயம் சிங் பேசுகையில்  சமாஜ்வாடி கட்சியில் எந்த பிளவும் இல்லை. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால், நான் எனது மகனுடன் பேசி அதனை தீர்க்க முயற்சிப்பேன். இது தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சினை. கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். நாங்கள் விரைவில் இணைந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம் என்றார்.

| |

?????? :