.
 
 
 
 
 
 

பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

.

Tuesday, 10 January, 2017   03:38 PM
.

சென்னை, ஜன.10: பொங்கல் விடுமுறை விஷயத்தை, விஷமமாக்கி பொது மக்களை எதிர்கட்சிகள் குழப்பி வருவதாக மத்திய
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


.

இது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் ” பொங்கல் விடுறை விவகாரத்தை அரசியல் செய்து தமிழக எதிர்கட்சிகள் பொது மக்களை குழப்பி வருகின்றன. விடுமுறை எடுப்பதில் பிரச்சினை இருந்தால் மத்திய அரசு பணியாளர் சங்கத்துக்கு தெரிய படுத்தலாம்.அவர்கள் இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிப்பர். அந்த சங்கத்தினர் இது குறித்து கூட்டு முடிவு எடுப்பர். இதை விட்டுவிட்டு மத்திய அரசை இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுப்பது எதிர்கட்சிகளின் மக்களை குழப்பும் விஷமச்செயலாகும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.     


காங்கிரஸ் ஆட்சி நடந்த போது 2011-ம் ஆண்டிலேயே இப்பிரச்சனை எழுந்தது. அப்போதே இதற்கு சட்ட பூர்வமான தீர்வை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இன்று அரசியலாக்க முயலுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

| |

?????? :