.
 
 
 
 
 
 

அன்புமணி ராமதாஸ் அறிக்கையில்

.

Tuesday, 10 January, 2017   03:36 PM
.
சென்னை, ஜன.10: பொங்கல் விடுமுறை மத்திய அரசின் கட்டாய விடுமுறைகள் பட்டியலில் 15 ஆண்டுகளாகவே இல்லை என்றும், விருப்ப விடுமுறைபட்டியலில்தான் நீடித்து வருவதாகவும், இது தெரிந்தும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த பிரச்சினையை ஊடகங்கள் மூலம் குழப்பி, அரசிலாக்கி வருவதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.  
.

அவர் கூறுகையில், மத்திய அரசு அலுவலகங்களை பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகும். 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகும்.
இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கான விடுமுறை மத்திய அரசின் கட்டாய விடுமுறைகள் பட்டியலில் 15 ஆண்டுகளாகவே இல்லை. விருப்ப விடுமுறைபட்டியலில்தான் நீடித்து வருகிறது. இது தெரிந்தும் திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்கி இந்த பிரச்சினையை ஊடகங்கள் மூலம் மக்களை குழப்பி வருகின்றன. குறிப்பாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.


ஆனால், இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகிய நாட்கள் மட்டும் கட்டாய விடுமுறை நாட்களாக இருக்கும் பட்சத்தில் பொங்கல் பண்டிகை மட்டும் பல ஆண்டுகளாகவே அந்த பட்டியலில் இல்லை. பொங்கல் பண்டிகையை கட்டாய தேசிய விடுமுறையாக அறிவிக்கும் தகுதி உள்ளது. விரைவில் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என கூறி உள்ளார் 

| |

?????? :