.
 
 
 
 
 
 

சிவகார்த்திகேயன் ஆதரவு

.

Tuesday, 10 January, 2017   03:34 PM
.

சென்னை, ஜன.10: தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வரும் நிலையில் தமிழ் திரையுலக முக்கிய கலைஞர்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகிறார்கள்.


.

நடிகர் கமலஹாசனைத் தொடர்ந்து முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று சென்னையில் இளைஞர்கள் நடத்திய பேரணி தமிழகத்தையே  திரும்பி பார்க்க வைத்தது. குறுகிய இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சென்னை கடற்கரை சாலையில் நடந்த பேரணியில் பங்கேற்றனர்.


இதனைத் தொடர்ந்து மதுரையிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்  திரண்டு ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டையிலும் இளைஞர்கள் குழுமியிருக்கிறார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான ஏறு தழுவுதல் என்ற வீர விளையாட்டிற்கு உலக நாயகன் கமலஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். அவரை போலவே  நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று அறிவித்திருந்தார்.


இந்தநிலையில், முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். ஏறு தழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பலகோடி பேரில் ஒரு தமிழனாய் நானும்...  இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

| |

?????? :