.
 
 
 
 
 
 

பெண் பாலியல் புகார் வழக்கு

.

Tuesday, 10 January, 2017   03:32 PM
.
சென்னை, ஜன.10 விமான நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி  முதுநிலை மேலாளரை கைது  செய்ய விமான நிலைய இன்ஸ்பெக்டர்  தலைமையில் தனிப்படை  குஜராத் செல்ல இருக்கிறது.
.

 அவரை விரைவில் கைது செய்து சென்னை அழைத்துவருவோம் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


சென்னை  விமான நிலையத்தில்    பெண் துப்புரவு ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணிடம்  விமான நிலைய முதுநிலை மேலாளர் முரளிதர அத்வானி  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக  அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.


இந்த புகார் தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்  கொடுத்ததை தொடர்ந்து முதுநிலை மேலாளர் பணியை குஜராத் மாநிலம்  சூரத்துக்கு மாறுதல் வாங்கிகொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.


போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.


  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  பெண் கொடுத்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  விமான நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டது.


  இந்த உத்தரவின் பேரில் சென்னை விமான நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையில் முரளிதர அத்வானி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தயாராக உள்ளது.
மேலும் பணி நிமித்தமாக குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றுள்ள விமான நிலைய முதுநிலை மேலாளரை முரளிதர அத்வானியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர்  விரைவில் சூரத் சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வர உள்ளனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

| |

?????? :