.
 
 
 
 
 
 

தமிழக அரசுக்கு தமிழிசை பாராட்டு

.

Tuesday, 10 January, 2017   03:31 PM
.

சென்னை, ஜன.10: உதய் மின் திட்டத்தில்  இணைந்ததற்கு  தமிழக அரசுக்கு தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்காதது தவறு என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து இன்றுகாலை 10மணிக்கு விமான மூலம் மதுரை சென்ற பிஜேபி  தலைவர்தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

 

.
 அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள்.  உதய் மின்திட்டத்தை  தமிழக அரசு ஏற்க மறுத்தது.  ஆனால் இந்த திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார்.
  இதன் காரணமாக ஜெயலலிதாவின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அனைத்து திருத்தங்களும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
 அவர் குறிப்பிட்டிருந்த திருத்தங்கள் மூலம்  தமிழக அரசுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி செலவு குறைந்தது. உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


தற்போது தமிழக  அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உதய் மின் திட்டத்தையும் சிறப்பாக வழிநடத்துவதற்கு எனது பாராட்டுக்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில்  பொங்கலுக்கு மத்திய அரசு விடுமுறை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, மத்திய அரசு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பு தவறு.  பல மாநிலங்களில் பொங்கல் விழாவை வெவ்வேறு பெயர்களில்  கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் சனிக்கிழமை வருகிறது. பண்டிகையின் போது  அவரவர்கள் விருப்பப்படி  விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இவ்வாறு அவர்  தனது பேட்டியில் கூறினார்.

| |

?????? :