.
 
 
 
 
 
 

உதய் திட்டதால் மின்கட்டணம் உயராது

.

Tuesday, 10 January, 2017   03:27 PM
.

புதுடெல்லி, ஜன.10: உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேர்ந்து விட்டதால் மின் கட்டணம் உயராது என்று அமைச்சர் வேலு மணி உறுதி அளித்துள்ளார்.
மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் லாபத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய உதய் திட்டத்தை மத்திய அரசு 2015, நவம்பர் 20-இல் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் தமிழகம் சேர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தில்லியில் மத்திய மின் துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி முன்னிலையில் கையெழுத்தானது.

 

.

மத்திய மின் துறை அமைச்சக இணைச் செயலர்கள் ஏ.கே.வர்மா, ஜோதி அரோரா ஆகியோர் தமிழக கூடுதல் தலைமைச் செயலரும் எரிசக்தித் துறை செயலருமான (கூடுதல் பொறுப்பு) ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழக (டான்ஜெட்கோ) தலைவர் சாய் குமார் ஆகியோர் இதற்கான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.
இத்திட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-


உதய் திட்டத்தில் சேர்ந்துள்ள மாநிலங்களை ஊக்குவிக்க அவற்றுக்கு சில சலுகைகளை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
அதிக மின் திறன் பயன்பாட்டை மாநிலங்கள் எட்டியிருந்தால், தேசிய அனல் மின் கழகம் (என்டிபிஎல்) மற்றும் பிற பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்க மத்திய அரசு உதவும்.


ஏழை விவசாயிகளுக்கு சில மாநிலங்கள் இலவச மின்சாரம் வழங்கினால், அதை மத்திய அரசு எதிர்க்காது. அதே சமயம், உதய் திட்டம் என்பது மின் பகிர்மான நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதை மட்டுமே ஊக்கவிக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றார் பியூஷ் கோயல்.


தமிழக அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வட்டி குறைப்பால் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டித் தொகை சேமிப்பாகும். உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்துள்ளதால் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

| |

?????? :