.
 
 
 
 
 
 

74வது கோல்டன் குளோப் விருதுகள்

.

Monday, 09 January, 2017   04:35 PM
.
கலிபோர்னியா, ஜன.9:உலக புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லா லா லேண்ட் படம் 7 விருதுகளை பெற்றது. மூன் லைட் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
.
சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 74-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இருக்கும் பிவெர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படமாக மூன்லைட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் லா லா லேண்ட் திரைப்படம், நகைச்சுவை பிரிவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கு விருதுகளை தட்டி சென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதை காஸே அஃப்லெக் என்பவர் மான்செஸ்டர் பை தி சி எனும் திரைப்படத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக இசபெல்லா ஹாப்பர்ட், எலே திரைப்படத்துக்காக தட்டிச் சென்றுள்ளார்.

இதேபோல் பிரெஞ்ச் மொழி திரைப்படமான எலே சிறந்த வெளிநாட்டு திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு நிகழச்சியின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினார். இவர் பேவாட்ச் படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் பிடித்தமான நடிகையானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற விருந்தில் நடிகை தீபிகா கலந்து கொண்டதாக தெரிகிறது.
| |

?????? :