.
 
 
 
 
 
 

கணவனை கொன்ற மனைவி

.

Thursday, 05 January, 2017   04:21 PM
.
தாம்பரம், ஜன. 5: மேடவாக்கத்தில்  வாலிபர் கொலையில் கள்ளக்காதலனுடன்  சேர்ந்து தீர்த்துக்கட்டிவிட்டு நாடக மாடிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கள்ளக் காதலனை தேடி வருகிகன்றனர்.
 
.
தாம்பரம் அடுத்த மேடவாக்கம் காந்தி நகர், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35). இவர் சென்னை சத்தியம் தியேட்டரில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுரேகா (வயது 30) என்ற மனைவி உள்ளார். இவரை தனதுவீட்டு வாசல் முன்பு அமர்ந்து அந்த பகுதியைச்சேர்ந்த ஒரு கும்பல் மது அருந்தியதாகவும் அவற்றை தட்டிக்கேட்ட எனது கணவரை இரவு 1 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக வெட்டிகொன்றது என்று கூறியுள்ளார். மேலும் தடுக்க சென்ற என்னையும் கட்டிப்போட்டு வெட்டினர் என்று கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவரது மனைவி மீது சந்தேகம் வரவே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது 3 வயது குழந்தையிடம் நடத்திய விசாரணையில் பேரில் போலீசார் சுரேகாவிடம் துருவிதுருவி நடத்திய விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த கணபதி என்பவருக்கும் சுரேகவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் இவற்றை தட்டிக்கேட்ட கணவனை அவனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மனவு சுரேகாவø கைது செய்துள்ளனர்ர. மேலும் தலைமறைவன கள்ளக்காதலன் கணபதியை தேடி வருகின்றனர்
| |

?????? :