.
 
 
 
 
 
 

டோனிக்கு சச்சின் புகழாரம்

.

Thursday, 05 January, 2017   04:15 PM
.
மும்பை, ஜன.5: டோனியின் முடிவை தாம் மதிப்பதாகவும், டோனி பெற்ற வெற்றிகளை கொண்டாடும் தருணம் இது என்றும் சச்சின் டெண்டுகல்கர் தெரிவித்துள்ளார்.
.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டோனியின் அறிவிப்பை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் டோனியின் முடிவை தாம் மதிப்பதாக சச்சின் டெண்டுகல்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டோனியின் முடிவை மதிக்கிறேன். அவரின் தலைமையில் பெற்ற வெற்றிகளை கொண்டாடும் தருணம் இது என்று தெரிவித்துள்ளார்.
| |

?????? :