.
 
 
 
 
 
 

கார் மோதி இளைஞர் பலி

.

Monday, 02 January, 2017   04:48 PM
.
சென்னை, ஜன.2: கத்திபாரா பாலத்தின் கீழ் நேற்று இரவு சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தவரை வேகமாக வந்த கார் மோதிவிட்டு சென்றுள்ளது.
.

இதில் அந்த நபர் பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.


அந்த தகவலை தொடர்ந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரிடம் இருந்த
செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

| |

?????? :