.
 
 
 
 
 
 

வேன் மரத்தில் மோதி ஒருவர் பலி

.

Monday, 02 January, 2017   04:35 PM
.
சேலம், ஜன.2: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
.
பேளூரை அடுத்த அனுப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 பேர்,  ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா
சென்றுவிட்டு வேனில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில், கீரிப்பட்டி என்ற இடத்தில் வளைவு ஒன்றில் நிலைதடுமாறிய வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத் தில் இருந்த புளியமரத்தில் மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சரவணன் என்பவர் உயிரிழந்தார்.
| |

?????? :