.
 
 
 
 
 
 

விமான விபத்து: 39 பேர் உயிதப்பினர்

.

Monday, 19 December, 2016   04:52 PM
.

மாஸ்கோ, டிச.19: 39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் நடுவானில் இரண்டாக  விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்பிழைத்தனர்.
.
ரஷ்யாவின் ஐஎல்-18 வகை ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் டிக்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் விழுந்து நொறுங்கியது. மொத்தம் 3 துண்டுகளாக இது உடைந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் விமானத்தில் பயணித்த 39 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் தகவல் வெளியானது. அடுத்து 27 பேர் இறந்துவிட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் ரஷ்ய பாதுகாப்பு துறை மறுத்துள்ளது.

16 பேர் படுகாயமடைந்ததாகவும் பிறர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, விமான விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.
| |

?????? :