அமெரிக்க தூதரகத்திற்கு பாதுகாப்பு |
||
. |
||
Monday, 17 September, 2012 04:27 PM
|
||
| . | ||
சென்னை, செப். 17: முஸ்லீம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருவதால் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
||
| . | ||
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் எடுத்த திரைப்படத்தை கண்டித்து அமெரிக்க தூதரங்களின் முன்பாக முஸ்லீம் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு கடந்த இரு தினங்களாக முற்றுகை போராட்டத்தை முஸ்லீம் அமைப்பினர் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் ஒரு சிலரால் அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. இதையடுத்து, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை கூடுதல் ஆணையர்கள் அபய்குமார் சிங், சஞ்சய் அரோரா, இணை ஆணையர்கள் சண்முகராஜேஷ்வரன், சேஷசாயி, செந்தாமரை கண்ணன் ஆகியோர் தலைமையில், 5 உதவி ஆணையர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்இன்ஸ்பெக்டர்கள், 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அதிரடி படை வீரர்கள் 100 பேரும், ஆயுதப்படை போலீசார் 100 பேரும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பீட்டர்ஸ் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று ஜனநாயக முஸ்லீம் அமைப்பின் சார்பில் சுமார் 150 பேர் ஒபாமா உருவ பொம்மையுடன் அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் இருந்து தூதரகம் நோக்கி போராட்டம் நடத்த வந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முஸ்லீம் அமைப்புகளுக்கு ஆதரவாக விடுதலைச்சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே இன்று அமெரிக்க அரசை கண்டித்தும், தூதரகத்தை மூட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























