Advertisements




 
 
 
 
 
 

18ந்தேதி லாரிகள் ஸ்டிரைக்

.

Sunday, 16 September, 2012   04:15 PM
.

சென்னை, செப்.16
டீசல் விலை உயர்வை கண்டித்து, வரும் 18ந்தேதி சென்னை சரக்கு போக்குவரத்து சங்கம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் சென்னையில் சரக்கு லாரிகள் ஓடாது.
.
சென்னை சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் பி.வி.சுப்பிரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழைஎளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே மத்திய அரசு பெட்ரோல் விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 18ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்த உள்ளோம். இதன் காரணமாக அன்றைய தினம் சென்னையிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சரக்கு லாரிகள் ஓடாது.இவ்வாறு சுப்பிரமணி கூறினார்.
| |

மற்றவை :